TNPSC Thervupettagam

உலக உணவுக் கொள்கை அறிக்கை

April 23 , 2023 582 days 295 0
  • சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) ஆனது, 2023 ஆம் ஆண்டு உலக உணவுக் கொள்கை அறிக்கையினை  வெளியிட்டுள்ளது.
  • கோவிட்-19 பெருந்தொற்று, பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை மற்றும் அரசியல் ரீதியான உறுதியற்றத் தன்மை போன்ற பல நெருக்கடிகள் காரணமாக 2020-2022 ஆம் ஆண்டில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 45 நாடுகளில் உள்ள 205 மில்லியன் மக்கள் நெருக்கடி நிலை அளவிலான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை அல்லது மோசமான நிலையை எதிர் கொண்டனர்.
  • ஆப்பிரிக்காவின் மக்கள் தொகையில் 20% பேர் உணவுப் பாதுகாப்பின்மை நிலையிலும், ஊட்டச் சத்துக் குறைபாடு உடையவர்களாகவும் உள்ளனர்.
  • பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, 2050 ஆம் ஆண்டிற்குள் மேலும் 72 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டு நிலையினால் பாதிக்கப் படுவார்கள்.
  • உலக மக்கள்தொகையில் பாதி பேர் அல்லது உலகளவில் சுமார் 3.83 பில்லியன் மக்கள் விவசாய உணவுமுறைகள் சார்ந்த வாழ்வாதாரங்களை நம்பியிருக்கும் குடும்பங்களில் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்