TNPSC Thervupettagam
July 1 , 2018 2341 days 786 0
  • உணவு பாதுகாப்பு நிலைக்குள்ளேயே தாய் மற்றும் சேய் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கியதற்காக லாரன்ஸ் ஹாடாடு மற்றும்டேவிட் நெபேரோ ஆகியோரின் தனிப்பட்ட மற்றும் தலைசிறந்த தலைமைக்காக உலக உணவுப் பரிசு-2018 வழங்கப்பட்டுள்ளது.
  • பசியைப் போக்குதல் மற்றும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பினை மேம்படுத்துதல் ஆகியவற்றில் வெற்றி கண்ட தனிப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய விருது உலக உணவுப் பரிசு ஆகும்.
  • இது 1986-ல் நோபல் பரிசு பெற்ற நார்மன் போர்லாக்-ஆல் (பசுமைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்) உருவாக்கப்பட்டது.
  • இதன் உருவாக்கத்திலிருந்து 7 இந்தியர்கள் இந்தப் பரிசினை வென்றுள்ளனர். பேராசியர்S.சுவாமிநாதன் இந்தப் பரிசினை முதலில் பெற்றவர் (1987) ஆவார்.
  • இந்த வருடம் 2,50,000 டாலர்கள் மதிப்பிலான பரிசுத் தொகை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்