TNPSC Thervupettagam
May 9 , 2022 806 days 830 0
  • பருவநிலை மற்றும் உணவு முறை ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பினைப் புரிந்து கொள்வதற்கும், எதிர்காலத்தில் இந்த இரண்டும் எப்படியெல்லாம் மாறும் என்பதைப் பற்றிக் கணிப்பதற்காகவும் ரோசன்ஸ்வீக் என்பவர் மேற்கொண்ட தனது ஆராய்ச்சிக்காக அவர் இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2021 ஆம் ஆண்டில் முன்னணி ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சகுந்தலா ஹரக்சிங் தில்ஸ்டெட் இந்தப் பரிசினை வென்ற நிலையில் 2020 ஆம் ஆண்டில் இந்திய -அமெரிக்க மண் அறிவியலாளரான டாக்டர் ரத்தன் லால் இந்தப் பரிசினை வென்றார்.
  • உலக உணவுப் பரிசு என்பது உலகில் உணவின் தரம், அளவு அல்லது கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் மனித மேம்பாட்டினை மேம்படுத்தியத் தனிநபர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் முதன்மையான ஒரு சர்வதேச கௌரவ விருதாகும்.
  • ஒவ்வோர் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ஐ.நா. உலக உணவுத் தினத்தன்று (அக்டோபர் 16) இந்தப் பரிசானது வழங்கப்படுகிறது.
  • இது 1986 ஆம் ஆண்டில் நோபல் அமைதிப் பரிசு பெற்ற நார்மன் போர்லாக் என்பவரால் தோற்றுவிக்கப் பட்டது.
  • இது உணவு மற்றும் விவசாயத் துறையால் உயர்ந்த விருதுகள் அல்லது நோபல் என்று ஊக்குவிக்கப் படுகின்றது.
  • இது தற்போது உலக உணவுப் பரிசு அறக்கட்டளை என்ற  அமைப்பால் நிர்வகிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்