இந்த நாள் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறுவப்பட்டது.
இது முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு ஜூன் 07 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
இந்த தினமானது, உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உணவு சார்ந்து ஏற்படும் அபாயங்களைக் கண்டறிந்து, தடுத்து, மேலாண்மை செய்யவும் உதவும் பல செயல்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: "Food Safety: Prepare for the Unexpected" என்பதாகும்.