உலக உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை அறிக்கை 2023
July 21 , 2023 492 days 338 0
இது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO), சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் (IFAD), ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் (UNICEF), உலக உணவுத் திட்ட அமைப்பு (WFP) மற்றும் உலகச் சுகாதார அமைப்பு (WFP) ஆகியவை இணைந்து வெளியிடும் வருடாந்திர ஒரு முதன்மை அறிக்கையாகும்.
பட்டினி நிலையை முடிவுக்குக் கொண்டு வருதல், உணவுப் பாதுகாப்பு நிலையை அடைதல் மற்றும் ஊட்டச்சத்து வழங்கீட்டினை மேம்படுத்துதல் மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கு ஏற்ற வகையில் இந்த இலக்குகளை அடைவதில் உள்ள முக்கியச் சவால்கள் பற்றிய ஒரு உள்ளார்ந்தப் பகுப்பாய்வினை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அறிக்கையின் மீதான கருத்துரு ‘நகரமயமாக்கல், வேளாண் உணவு முறைகளில் மாற்றம் மற்றும் கிராமப்புற-நகர்ப்புறத் தொடர்பியலில் ஆரோக்கியமான உணவு முறைகள்’ என்பதாகும்.
2022 ஆம் ஆண்டில் உலகில் 700 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினி நிலையை எதிர்கொண்டனர்.
2022 ஆம் ஆண்டில் 2.4 பில்லியன் மக்கள் ஊட்டச்சத்துமிக்க, பாதுகாப்பான மற்றும் போதுமான உணவினைத் தொடர்ந்துப் பெறுவதற்கான வாய்ப்பினைப் பெற்றிருக்க வில்லை.
2021 ஆம் ஆண்டில் 22.3% (148.1 மில்லியன்) குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும் (வயதிற்கு ஏற்ற உயரமின்றி), 6.8% (45 மில்லியன்) பேர் உடல் நலிவுற்றவர்களாகவும் (உயரத்திற்கு ஏற்றவாறு எடை இன்றி மெலிந்துக் காணப்படுதல்), 5.6% (37 மில்லியன்) பேர் அதிக எடையுடையவர்களாகவும் இருந்தனர்.
முன்னதாக தன்னிறைவு பெற்ற கிராமப்புறப் பகுதிகள், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள கிராமப்புறப் பகுதிகள், தற்போது தேசிய மற்றும் உலக உணவுச் சந்தைகளை அதிகளவில் சார்ந்து இருப்பதாகக் கண்டறியப் பட்டு உள்ளது.