இது பிரிட்டிஷ் வார இதழான "தி எகனாமிஸ்ட்" இதழ் மூலம் வெளியிடப்பட்டது.
இதில் பின்லாந்து முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் உள்ளன.
இந்த அறிக்கையில், 59வது இடத்தினைப் பெற்ற தென்னாப்பிரிக்கா, துனிசியாவை பின்னுக்குத் தள்ளி, ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே மிகவும் உணவுப் பாதுகாப்பு மிக்க நாடாக மாறியது.
ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதியில் உள்ள ஒரு நாடு இந்தக் கண்டத்தில் முன்னிலை வகுப்பது இதுவே முதல் முறையாகும்.
மேலும் இந்த அறிக்கையானது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகளாவிய உணவுச் சூழலமைவில் சீரழிவு ஏற்பட்டு வருவதாகவும், உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துகின்ற நிலையையும் எடுத்துரைக்கிறது.
2012 முதல் 2015 ஆம் ஆண்டு வரை உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா அல்ஜீரியாவுடன் இணைந்து 68வது இடத்தினைப் பெற்று உள்ளது.