இந்த நாள் பாதுகாப்பான உணவு நடைமுறைகளின் முக்கியத்துவத்தினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் பாதுகாப்பான உணவின் ஒரு உலகளாவியத் தேவையை முன்னிலைப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்த சர்வதேச தினம் உருவாக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒரு தீர்மானத்தின் மூலம் இந்த நாள் ஏற்கப் பட்டது.
2023 ஆம் ஆண்டு உலக உணவுப் பாதுகாப்புத் தினத்தின் கருப்பொருள் "உணவுத் தர நிலைகள் உயிர்களைக் காக்கும்" என்பதாகும்.