ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17 ஆம் தேதியன்று உலக உயர் இரத்த அழுத்த தினம் (WHD - World Hypertension Day) அனுசரிக்கப்படுகின்றது.
இது சர்வதேச உயர் இரத்த அழுத்த சமூகத்துடன் இணைக்கப்பட்ட உலக உயர் இரத்த அழுத்த அமைப்பின் ஒரு முன்னெடுப்பாகும்.
2005 ஆம் ஆண்டு மே மாதம் WHD முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
இத்தினமானது உயர் இரத்த அழுத்தம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் அமைதியாக அழிக்கக் கூடிய இந்த நவீன கால பரவும் நோயினை கட்டுப்படுத்த மற்றும் தடுக்க அனைத்து நாடுகளின் குடிமக்களை ஊக்குவிப்பதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “உன்னுடைய எண்களை அறிந்து கொள்” என்பதாகும்.
இந்தக் கருத்துருவானது உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் உயர் இரத்த அழுத்தம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதைக் குறிக்கின்றது.