உயர் இரத்த அழுத்தத்தினை ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக முன் வைப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் 46% பேருக்கு இந்த நிலை பற்றியத் தகவல்கள் தெரியாது.
உலக உயர் இரத்த அழுத்தம் தினம் ஆனது முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
இது உலக உயர் இரத்த அழுத்தக் கழகத்தினால் அறிமுகப் படுத்தப் பட்டது ஆகும்.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது, "உங்கள் இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிட்டு, அதைக் கட்டுப்படுத்தி, நீண்ட காலம் வாழ்தல்" என்பதாகும்.