1893 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று ஜெர்மன் பொறியாளர் சர் ருடால்ஃப் டீசல் என்பவர் கடலை எண்ணெயைக் கொண்டு இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்கியதை நினைவு கூரும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
பசுமை இல்லை வாயு உமிழ்வைக் குறைப்பதிலும், எரிசக்திப் பாதுகாப்பை வெகுவாக ஊக்குவிப்பதிலும், மற்றும் கிராமப்புற மேம்பாட்டினை நன்கு ஆதரிப்பதிலும் உயிரி எரிபொருளின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
உயிரி எரிபொருள் என்பது தாவரங்கள் அல்லது விலங்குகளின் கழிவுகளிலிருந்து பெறப் படும் எரிபொருள் ஆகும்.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Sustainable Biofuels: Fueling a Greener Future" என்பதாகும்.