உலக உறக்க தினமானது ஒவ்வொரு வருடமும் வட துருவத்தின் வசந்த காலத்தின் சம பகலிரவு தினத்திற்கு முன்பான வெள்ளிக்கிழமையன்று அனுசரிக்கப்படுகின்றது.
இவ்வருட (2019) உலக உறக்க தினமானது மார்ச் 15-ம் தேதியன்று “ஆரோக்கியமான உறக்கம், ஆரோக்கிய வயது முதிர்வு” எனும் கருத்துருவுடன் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இது உறக்கத்தைக் கொண்டாடுவதற்காகவும் ஆரோக்கிய நலனிற்கு உறக்கமென்பது எவ்வாறு முக்கியம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காகவும் திட்டமிடுகின்றது.
இந்நிகழ்ச்சி 2008 ஆம் ஆண்டிலிருந்து உலக உறக்கச் சங்கத்தின் உலக உறக்க தினக் குழுவால் அனுசரிக்கப்படுகின்றது.