ஆண்டுதோறும் வசந்தகால சம இரவுப் பகலுக்கு (Spring Vernal Equinox) முன்பான வெள்ளிக்கிழமையில் (மார்ச் 16) உலக உறக்க தினம் கொண்டாடப்படுகின்றது.
உலக உறக்க சொசைட்டியின் (World Sleep Day Committee) உலக உறக்க தினக் குழுவால் (World Sleep Society) இத்தினம் 2008 ஆண்டு முதல் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது.
ஓர் வருடாந்திர அனுசரிப்பு நிகழ்வான உலகக் உறக்க தினமானது, உறக்கத்தை கொண்டாடுவதற்காகவும், தூக்கம், மருந்து, கல்வி, சமூக அம்சங்கள் தொடர்பான முக்கியப் பிரச்சனைகள் மேல் செயல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அழைப்பு விடுப்பதற்காகவும் கொண்டாடப் படுகின்றது.
எதிர் வருகின்ற 2019-ஆம் ஆண்டின் மார்ச் 15 ஆம் தேதியும் மற்றும் 2020 ஆம் ஆண்டின் மார்ச் 14 ஆம் தேதியும் உலக உறக்க தினங்களாகும்.