உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தனிநபர்கள் உறுப்பு தானம் செய்வதை கருத்தில் கொள்ள ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
ஒருங்கிணைந்த உறுப்பு தான வலையமைப்பின் கூற்றுப் படி, சுமார் 1,03,993 பேருக்கு உயிர்காக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
ரொனால்ட் லீ ஹெரிக் தனது உறுப்புகளைத் தானம் செய்த முதல் நபர் ஆவார்.
1954 ஆம் ஆண்டில், அவர் தனது சிறுநீரகத்தை தனது இரட்டை சகோதரருக்கு தானம் செய்தார் என்பதோடு இந்த வெற்றிகரமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் டாக்டர் ஜோசப் முர்ரே ஆவார்.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Be the Reason for Someone's Smile Today!" என்பதாகும்.