TNPSC Thervupettagam

உலக உறுப்பு தான தினம் - ஆகஸ்ட் 13

August 16 , 2023 469 days 221 0
  • இத்தினமானது உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • இது உயிரைக் காப்பாற்றவும், அவசியம் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இறந்த பிறகு தங்கள் உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களைத் தானம் செய்வதற்கு உறுதியளிக்கவும் வேண்டி மக்களை ஊக்குவிக்கிறது.
  • இந்த நாள் 2005 ஆம் ஆண்டில் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
  • 1954 ஆம் ஆண்டில் ரொனால்ட் லீ ஹெரிக் தனது சிறுநீரகத்தைத் தனது இரட்டையரான சகோதரருக்கு தானம் செய்த நிகழ்வு தான் முதல் உடல் உறுப்பு தானமாகும்.
  • இந்தியாவில் முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்த நபர் லலிதா ரகுராம் என்பவர் ஆவர்.
  • 1994 ஆம் ஆண்டில், அவர் தனது கணவருக்குச் சிறுநீரகத்தைத் தானம் செய்ததன் மூலம் நாட்டில் பதிவான, உயிருள்ள நபர் செய்த முதலாவது உறுப்பு தானம் இதுவாகும்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “தன்னார்வத் தானம் செய்ய முன் வாருங்கள்; குறைபாடுகளை நிரப்புவதற்கு அதிக எண்ணிக்கையிலான உறுப்பு தானம் செய்பவர்கள் தேவை” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்