உலக உற்பத்தி குறியீடு (Global Manufacturing Index)
January 14 , 2018 2637 days 971 0
உலக பொருளாதார மன்றம் (The World Economic Forum - WEF) உலக உற்பத்திக் குறியீட்டு தரவரிசையில் இந்தியாவை 30வது இடத்தில் வரிசைப் படுத்தியுள்ளது.
ஜெனீவாவைச் சேர்ந்த இந்த உலகப் பொருளாதார மன்றம் உற்பத்திக்கான எதிர்காலத்தின் தயார்நிலை அறிக்கையின் முதல் பதிப்பை வெளியிட்டுள்ளது.
உற்பத்திக்கான சிறந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் பின்னணியில் ஜப்பான் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கின்றது.
பிரிக்ஸ் நாடுகளின் மத்தியில் சீனாவின் 5வது இடத்தை விட இந்தியா பின்தங்கியிருந்தாலும் மற்ற சக பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்காவை விட முன்னேறிய இடத்தில் உள்ளது.
பிரிக்ஸ் நாடுகளில், ரஷ்யா 35வது இடத்திலும், பிரேசில் 41வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 45வது இடத்திலும் உள்ளன.
இந்தியா இந்த அறிக்கையில் மரபு அணி (Legacy group) என்ற பிரிவில் (தற்போதைய வலுவான அடிப்படை, எதிர்காலத்தில் அபாயத்தில்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.