TNPSC Thervupettagam

உலக உற்பத்தித்திறன் மாநாடு - 2020ன் 19வது பதிப்பு

March 2 , 2020 1609 days 580 0
  • உலக உற்பத்தித்திறன் மாநாட்டின் (World Productivity Congress WPC) 19வது பதிப்பானது பெங்களூரில் நடைபெற இருக்கின்றது.
  • WPC என்பது உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கான உலகின் மிகப்பெரிய மாநாடு ஆகும். இது எதிர்கால உற்பத்தி வளர்ச்சியை வடிவமைக்கும் புதுமையான மற்றும் உலகத் தரம் வாய்ந்த நடைமுறைகளை ஊக்குவிக்கின்றது.
  • முந்தைய WPC ஆனது இந்தியாவில் 1974 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதன் பிறகு இது தற்பொழுது 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ளது.
  • 19வது உற்பத்தித்திறன் மாநாடு - 2020ன் கருப்பொருள்: “தொழில் துறை 4.0 - புதுமை மற்றும் உற்பத்தித்திறன்” என்பதாகும்.
  • கனடாவின் மாண்ட்ரீயலைத் தலைமையிடமாகக் கொண்ட உலக உற்பத்தித் திறன் கூட்டமைப்பானது 1969 ஆம் ஆண்டு முதல் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்