2வது உலக உள்ளூர் உற்பத்தி மன்றம் ஆனது, நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்றது.
தரமான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சுகாதாரப் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக நிலையான உள்ளூர் உற்பத்தி திறனை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது உலக சுகாதார அமைப்பின் முன்னெடுப்பு ஆகும்.
முதலாவது உலக உள்ளூர் உற்பத்தி மன்றம் ஆனது 2021 ஆம் ஆண்டில் காணொளி வாயிலாக நடத்தப்பட்டது.