"உலக ஊதிய அறிக்கை 2022-2023: ஊதியம் மற்றும் வாங்கும் திறனில் பணவீக்கம் மற்றும் COVID-19 பெருந்தொற்று ஆகியவற்றின் தாக்கம்" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையினை சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாக 2022 ஆம் ஆண்டில் முதல் முறையாக உலக அளவில் ஊதியங்கள் குறைந்துள்ளன.
இது சமத்துவமின்மையை மேலும் மோசமாக்கக்கூடிய மற்றும் சமூக அமைதி இன்மையைத் தூண்டும் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது.
பல்கேரியா, ஸ்பெயின், இலங்கை, தென் கொரியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குறைந்த பட்ச ஊதியத்தில் வீழ்ச்சியை எதிர்கொண்ட நாடுகளாகும்.
இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் நிலவிய 2008 ஆம் ஆண்டின் நிலையுடன் ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டில் வழங்கப்படும் ஒட்டு மொத்த ஊதியமானது நிகழ்நேர அடிப்படையில் குறைவாக இருந்தது.
1999 ஆம் ஆண்டு முதல் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் காணப்படும் இயல்பு நிலை தொழிலாளர் உற்பத்தித் திறனின் வளர்ச்சிக்கும் இயல்பு நிலை ஊதிய வளர்ச்சிக்கும் இடையேயான மிகப்பெரிய இடைவெளியானது 2022 ஆம் ஆண்டில் தான் பதிவாகியுள்ளது.
வளர்ந்து வரும் G20 நாடுகளில் உள்ள இயல்பு ஊதியம் மற்றும் வளர்ச்சி பெற்ற G20 நாடுகளில் உள்ள இயல்பு ஊதியம் ஆகியவற்றிற்கு இடையேயான சராசரி அளவில் பரந்த இடைவெளி காணப்படுகிறது.