இந்தியாவும் உலக எக்ஸ்போ 2020 துபாய் அமைப்பும் 5 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் புகழ்பெற்ற உலக எக்ஸ்போ 2020 கண்காட்சியில் இந்தியாவின் கூடாரங்களை (pavilion) அமைக்க ஓர் பங்கேற்பாளர் ஒப்பந்தத்தில் (participants contract) கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி, பொது மற்றும் தனியார் கூட்டிணைவு மாதிரி (public-private partnership mode) முறை மூலம் 2020 உலக எக்ஸ்போவில் இந்தியாவின் கூடாரம் அமைக்கப்படும்.
இந்த ஒப்பந்தமானது அந்த 2020 எக்ஸ்போ கண்காட்சியில் வாய்ப்புகள் பிரிவில் (Opportunity segment) மிகப்பெரிய பரப்பளவில் (ஒரு ஏக்கர்) இந்தியாவின் கூடாரத்தை அமைக்க வகை செய்கின்றது.