2022 ஆம் ஆண்டில், எண்ணிமப் பண வழங்கீட்டில் முன்னணியில் உள்ள ஐந்து நாடுகளின் பட்டியலில் 89.5 மில்லியன் எண்ணிமப் பரிவர்த்தனைகளுடன் இந்தியா முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
உலகின் நிகழ்நேரப் பண வழங்கீட்டில் இந்தியா 46% பங்கைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் எண்ணிமப் பணப் பரிவர்த்தனைகள் மற்ற நான்கு முன்னணி நாடுகளின் கூடுதலை விட அதிகமாக உள்ளது.
29.2 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும் மற்றும் 17.6 மில்லியன் எண்ணிமப் பரிவர்த்தனைகளுடன் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
16.5 மில்லியன் எண்ணிமப் பரிவர்த்தனைகளுடன் தாய்லாந்து 4வது இடத்தில் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து 8 மில்லியன் மதிப்பிலான பரிவர்த்தனைகளுடன் தென் கொரியா இடம் பெற்றுள்ளது.