எச்ஐவி தடுப்பு மருந்து விழிப்புணர்வு தினம் என்றும் அழைக்கப்படும் உலக எய்ட்ஸ் தடுப்பு மருந்து தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினமானது எச்ஐவியைத் தடுப்பதற்கான மருந்தை மேம்படுத்தும் பல தன்னார்வலர்கள், சமூக உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அங்கீகரிக்கின்றது.
உலக எய்ட்ஸ் தடுப்பு மருந்து தினம் என்ற கருத்துருவானது 1997 ஆம் ஆண்டு மே 18 அன்று அதிபர் பில் கிளிண்டன் நிகழ்த்திய உரையிலிருந்து உருவானது.
கிளிண்டன் நிகழ்த்திய உரையின் நினைவினை அனுசரிப்பதற்காக 1998 ஆம் ஆண்டு மே 18 அன்று முதலாவது எய்ட்ஸ் தடுப்பு மருந்து தினம் அனுசரிக்கப்பட்டது. எச்ஐவி தொற்று மற்றும் எய்ட்ஸ் ஆகியவற்றைத் தடுப்பதற்கான மருந்தின் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.