1997 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மேரிலாந்தில் உள்ள மோர்கன் மாகாண பல்கலைக் கழகத்தில் HIV தடுப்பு மருந்து குறித்து உரை நிகழ்த்தினார்.
அதிபரின் அந்த உரைக்கு மதிப்பளிக்கும் விதமாக, மே 18 ஆம் தேதியானது உலக எய்ட்ஸ் தடுப்பு மருந்து தினமாகக் கொண்டாடப்பட்டது.
முதல் சர்வதேச எய்ட்ஸ் தடுப்பு மருந்துச் சோதனையானது 1997 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
இந்தச் சோதனைக்கு RV144 என்று பெயரிடப்பட்டது.
இரண்டு தடுப்பு மருந்துகளின் ஒரு கலவையான, HIV தொற்றிற்கு எதிரான முதல் தடுப்பு மருந்துச் சோதனை, HIV நோய்த் தொற்றின் அபாயத்தை 31% குறைத்தது.
ஒரு வருடம் கழித்து 1998 ஆம் ஆண்டில் இந்த நாள் முதன்முதலில் அனுசரிக்கப் பட்டது.
HIV தொற்றினால் இதுவரை 40.1 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் பல்வேறு தரவுகளின் படி, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 38.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் பாதிப்புடன் வாழ்கின்றனர்.