இத்தினம் 1988 ஆம் ஆண்டு முதல், பெறப்பட்ட நோயெதிர்ப்பு குறைபாடு நோய்க்குறி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மனித நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கும் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (HIV) தொற்று காரணமாக ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும்.
இந்தியாவில் சுமார் 2.47 மில்லியன் மக்கள் HIV பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, கடந்த ஆண்டு சுமார் 66,000 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
டிசம்பர் 01 ஆம் தேதியன்று உலக சுகாதார அமைப்பு ஆனது, சமூகங்கள் மற்றும் பங்குதார அமைப்புகளுடன் சேர்ந்து “Let communities lead” என்ற கருத்துருவின் கீழ் 2023 ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தை நினைவு கூருகிறது.