1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 01 அன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக எய்ட்ஸ் தினத்தின் 30-வது ஆண்டின் நினைவை இந்த ஆண்டு (2018) குறிக்கிறது.
எச்.ஐ.வியானது சர்வதேச பொது சுகாதார பிரச்சனை என்ற வகையில் அதனைக் குறித்து ஒரு புரிதல், கல்வி மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவானது, “உங்களுடைய நிலையை அறிந்து கொள்ளுதல்” என்பதாகும்.
1987 ஆம் ஆண்டில் டிசம்பர் 01 ஆம் தேதியை உலக எய்ட்ஸ் தினமாக உலக சுகாதார அமைப்பானது (WHO- World Health Organization) தேர்ந்தெடுத்தது.
இது அதிகாரப்பூர்வமாக உள்ள 8 சர்வதேச பொது சுகாதாரப் பிரச்சாரங்களில் ஒன்றாக உலக சுகாதார அமைப்பினால் குறிக்கப்பட்டுள்ளது.