2019 ஆம் ஆண்டின் உலக எய்ட்ஸ் தினமானது டிசம்பர் 1 ஆம் தேதியன்று “சமுதாயங்கள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன” என்ற தலைப்பில் அனுசரிக்கப்பட்டது.
எய்ட்ஸ் தினமானது 1988 ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகின்றது.
2030 ஆம் ஆண்டளவில் பொது சுகாதார அச்சுறுத்தல் என்ற நிலையிலிருந்து எய்ட்ஸை ஒழிப்பதற்கான நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்காக மத்திய அரசானது 2017 முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஒரு தேசிய உத்திசார் திட்டத்தைச் செயல்படுத்துகின்றது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டமானது எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றிற்காக நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றது.