TNPSC Thervupettagam

உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 01

December 2 , 2020 1367 days 547 0
  • இது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க் கூட்டறிகுறி (AIDS - Acquired Immuno Deficiency Syndrome) குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மனித நோய் எதிர்ப்பு அமைப்பைப் பாதிக்கும் மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு வைரஸின் தொற்றின் (HIV) காரணமாக ஏற்படும் ஒரு கொள்ளை நோய் ஆகும்.
  • இந்தத் தினமானது HIV தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் மக்களை ஒன்றிணைப்பதற்காகவும் HIV தொற்றுடன் வாழ்பவர்களுக்கு தேவையான ஆதரவைத் தெரிவிப்பதற்காகவும் வேண்டிய ஒரு வாய்ப்பினை அளிக்கின்றது.
  • உலக எய்ட்ஸ் தினமானது முதன்முதலில் 1988 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “HIV/எய்ட்ஸ் தொற்று நோயின் தாங்கு தன்மை மற்றும் தாக்கத்தை முடிவிற்குக் கொண்டு வருதல்என்பதாகும்.

AIDSற்கான திட்டம்

  • மத்திய அரசானது எய்ட்ஸின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்காக தேசிய எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை (National AIDS Control Programme - NACP) 100% அளவில் ஒரு மத்தியத் துறைத் திட்டமாகச் செயல்படுத்தி வருகின்றது.
  • HIV கொள்ளை நோய்க்கான NACPயின் எதிர்வினையானது தடுத்தல், பரிசோதனை மற்றும் சிகிச்சை என்ற விரிவான 3 அடுக்கு கொண்ட ஒரு உத்தி முறையைக் கொண்டுள்ளது.
  • மேலும் மத்திய அரசானது 2017 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 7 ஆண்டு கால அளவிற்கு ஒரு தேசிய உத்திசார் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்