TNPSC Thervupettagam

உலக எறும்புத் திண்ணி தினம் - பிப்ரவரி 15

February 20 , 2025 2 days 33 0
  • இந்தத் தினமானது, எறும்புத் திண்ணி என்ற தனித்துவமான பாலூட்டி இனங்களைப் பற்றிய விழிப்புணர்வினை வளர்ப்பதில் அதன் ஆர்வலர்களை ஒன்றிணைப்பதற்கு ஒரு வாய்ப்பாகும்.
  • செதில்கள் கொண்ட பாலூட்டி இனம் இது மட்டுமேயாகும்.
  • இவைகளுக்குப் பற்கள் இல்லை எனவே இவை எறும்புகள் மற்றும் கரையான்களை மட்டுமே உட்கொள்கின்றன.
  • ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் தலா நான்கு வகைகளுடன் உலகளவில் மொத்தம் எட்டு வகையான எறும்பு திண்ணிகள் காணப்படுகின்றன.
  • எறும்புத் திண்ணி இனத்தில் இந்திய எறும்புத் திண்ணி மட்டுமே ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காணப்படுகிறது.
  • தடிமனான வால் கொண்ட எறும்புத் திண்ணி மற்றும் செதில்கள் கொண்ட எறும்புத் திண்ணிகள் என்று வெகுவாக அழைக்கப்படும் இந்திய எறும்புத் திண்ணி (மணிஸ் கிராசிகௌடாட்டா) ஆனது, இந்திய துணைக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டது.
  • இது 1972 ஆம் ஆண்டு இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) என்ற சட்டத்தின் முதலாவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது மற்றும் அருகி வரும் நிலையில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் மீதான ஒப்பந்தத்தின் (CITES) 1 வது பட்டியலில் பட்டியலிடப் பட்டுள்ளது.
  • இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் ‘மிக அருகி வரும் ஒரு உயிர் இனம்’ என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்