இந்த அதிகம் அறியப்படாத, அருகி வரும் மற்றும் உலகிலேயே அதிகளவில் கடத்தப் படும் பாலூட்டிகளில் ஒன்றான எறும்புத் திண்ணிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் ஒரு வாய்ப்பாக செயல்படுகிறது.
2009 முதல் 2017 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் சுமார் 6,000 எறும்புத் திண்ணிகள் சட்ட விரோதமாக வேட்டையாடப்பட்டுள்ளன.
இந்தியாவில், மொத்தமுள்ள ஒன்பது எறும்புத் திண்ணிகள் இனங்களில் இந்திய எறும்புத் திண்ணிகள் (அருகி வரும் இனம்) மற்றும் சீன எறும்புத் திண்ணிகள் (மிகவும் அருகி வரும் இனம்) ஆகிய இரண்டு இனங்கள் காணப் படுகின்றன.