TNPSC Thervupettagam

உலக எலும்புப் புரை நாள் - அக்டோபர் 20

October 21 , 2018 2227 days 516 0
  • உலக எலும்புப் புரை தினமானது (WOD - World Osteoporosis Day) ஆண்டுதோறும் அக்டோபர் 20 அன்று எலும்புப் புரை மற்றும் எளிதில் ஏற்படக்கூடிய எலும்புமுறிவு குறித்து உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாளானது எலும்புப் புரை நோய் தடுப்பு, நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • அக்டோபர் 20, 1996 அன்று தொடங்கப்பட்ட இந்த நாளானது 1997 ஆம் ஆண்டு முதல் சர்வதேச எலும்புப் புரை அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில், உலக சுகாதார நிறுவனமானது உலக எலும்புப் புரை தினத்தின் இணை ஏற்பாட்டாளராக செயல்பட்டது.
  • எலும்புப் புரை என்பது எலும்புகளை பலவீனமாகவும் எளிதில் நொறுங்கக் கூடியதாகவும் மாற்றக்கூடிய ஒரு நோயாகும், இது எலும்புகள் உடையும் ஆபத்தை அதிகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்