உலக ஒவ்வாமை வாரம் என்பது 2011 ஆம் ஆண்டிலிருந்து உலக ஒவ்வாமை அமைப்பினால் வருடந்தோறும் கடைபிடிக்கப்படும் ஒரு உலகளாவிய முன்னெடுப்பு ஆகும்.
இது 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல் 07 முதல் 13-ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் கருத்துருவானது “உணவு ஒவ்வாமை என்பது உலகளாவிய பிரச்சனை” என்பதாகும்.
உலக ஒவ்வாமை அமைப்பானது இராண்டாண்டிற்கு ஒருமுறை நடைபெறும் உலக ஒவ்வாமைக்கான கூடுகையுடன் இணைந்து 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உலக ஒவ்வாமை தினத்தை நடத்தியது. இத்தினம் ஆண்டுதோறும் ஜூலை 08 அன்று அனுசரிக்கப்படுகிறது.