ஓசோன் படலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதன் சிதைவு மனித ஆரோக்கியம், சூழலியல் அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழலில் எவ்வாறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் மக்களுக்குத் தெரிவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மற்ற 45 உலக நாடுகள் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதியன்று, ஓசோன் படலத்தைச் சிதைக்கும் கூறுகள் குறித்த மாண்ட்ரீயல் நெறிமுறையில் கையெழுத்திட்டன.
எனவே, ஒவ்வோர் ஆண்டும் இந்த நாள் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினமாகக் கொண்டாடப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதியன்று, வியன்னா உடன்படிக்கை மற்றும் மாண்ட்ரீயல் நெறிமுறை ஆகியவை ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் உலகளாவிய அங்கீகாரத்தை அடைந்த முதல் ஒப்பந்தங்களாகும்.
மாண்ட்ரீயல் நெறிமுறைக்கான கிகாலி திருத்தமானது சட்டப்பூர்வமாக ஒரு பிணைப்பினைக் கொண்டுள்ள நிலையில் இது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தத் திருத்தம் ஆனது 2040 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஆற்றல்மிக்க பசுமை இல்ல வாயுக்களின் குழுவினைச் சேர்ந்த ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களை (HFCs) படிப்படியாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “மாண்ட்ரீயல் நெறிமுறை: ஓசோன் அடுக்கைச் சரிசெய்தல் மற்றும் பருவநிலை மாற்றத்தைக் குறைத்தல்” என்பதாகும்.