இந்தத் தினமானது, கடல் புல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் உலகளாவிய வீழ்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை மீண்டும் அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான அவசரத் தேவையை அங்கீகரிக்கிறது.
கடல் புல் என்பது அண்டார்டிகாவைத் தவிர இதர அனைத்துக் கண்டத்திலும் ஆழமற்ற கடலோர நீரில் காணப்படும் கடல் வாழ் பூக்கும் தாவரங்கள் ஆகும்.
அவை உலகின் கடல்சார் கார்பனில் 18% வரை உட்கிரகித்துள்ள மிகவும் திறம் மிக்க கார்பன் உறிஞ்சிகள் ஆகும்.