இது வளமான கடல்கள், கடற்கரைகள் ஆகியவற்றை உருவாக்குவதிலும், ஒரு பருவ நிலை சார்ந்தத் தீர்வாகவும் கடற்புல் வகிக்கும் பங்கு பற்றிய விழிப்புணர்வு மற்றும் கொண்டாட்டத்திற்கான ஒரு தினமாகும்.
இது கடற்புல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், பருவ நிலை மாற்றம், மாசுபாடு மற்றும் பிற மனித நடவடிக்கைகள் சார்ந்த பாதிப்புகள் போன்ற சவால்களுக்கு எதிராக அவற்றின் நெகிழ்திறனை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.
கடல் புற்கள் மட்டுமே வெப்ப மண்டலத்திலிருந்து ஆர்க்டிக் வட்டாரம் வரையிலான கடல் பரப்பின் ஆழமற்றப் பகுதிகளில் உள்ள பூக்கும் தாவரங்கள் ஆகும்.
உலகில் 60க்கும் மேற்பட்ட கடல் புல் வகைகள் உள்ளன.
இது கடல் தளத்தின் 300,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவிக் காணப்படுகிறது.
ஒரு வகை "நீல நிறக் காடு" (கடற்காடு) என்று குறிப்பிடப் படுகின்ற இது, ஆயிரக் கணக்கான மீன்கள், கடல் குதிரைகள், ஆமைகள் மற்றும் பிற கடல் விலங்குகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றினை வழங்குகிறது.
IUCN அமைப்பானது, உலகிலுள்ள கிட்டத்தட்ட 21% கடற்புல் வகைகளை அச்சுறுத்தப் படுதல் அல்லது பாதிக்கப்படக் கூடிய அல்லது அருகி வரும் நிலையில் உள்ள இனங்களாக வகைப்படுத்துகிறது.
இத்தினமானது 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது.