TNPSC Thervupettagam

உலக கடலாமைகள் தினம் - மே 23

May 25 , 2024 55 days 121 0
  • கடலாமைகள் மற்றும் நில ஆமைகளின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்விடம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அது குறித்து நல்ல புரிதலுடன் அவற்றின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் படி மக்களைத் தூண்டச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2000 ஆம் ஆண்டு அமெரிக்க நில ஆமை மீட்பு நிறுவனத்தால் கடலாமைகள் மற்றும் நில ஆமைகளைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள மக்கள் ஒன்று கூடுமாறு வலியுறுத்தும் விதமாகத் தொடங்கப்பட்டது.
  • சில சமயங்களில் அவை ஒன்றையொன்று தவறாகக் கருதப்பட்டாலும், கடலாமைகள் மற்றும் நில ஆமைகள் ஆகிய இரண்டும் வெவ்வேறு உயிரினங்கள் ஆகும்.
  • அண்டார்டிகாவைத் தவிர, பிற பகுதிகளில் காணப்படும் கடலாமைகள் சிறந்த தகவமைப்பு உடையவை என்பதோடு அவை எல்லா கண்டங்களிலும் காணப் படுகின்றன.
  • தென்கிழக்கு வட அமெரிக்கா மற்றும் தெற்காசியாவில் பெரும்பாலான கடலாமை இனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்