2020 ஆம் ஆண்டிற்கான உலக கட்டிடக் கலைக்கான தலைநகரமாக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவை யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
யுனெஸ்கோ மற்றும் சர்வதேச கட்டிடக் கலை நிபுணர்கள் கூட்டமைப்பு ஆகியோரால் 2018 நவம்பரில் தொடங்கப்பட்டத் திட்டத்தின் கீழ் இந்த சிறப்பை பெறும் முதல் நகரம் ரியோ ஆகும்.
இந்த இடத்தைப் பெறுவதற்கு பாரீஸ் மற்றும் மெல்பர்ன் ஆகியவற்றை ரியோ முந்தியுள்ளது.
கட்டிடக் கலையின் முதல் உலக தலைநகரமாக, ரியோ டி ஜெனிரோவானது 'அனைத்து உலகங்களும் ஒரே உலகமே' (All the worlds. Just one world) என்ற கருத்துருவின் கீழ் ஒரு தொடர் நிகழ்வை நடத்தும்.
மேலும் இது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் 2030-ன் 11-வது குறிக்கோளான நகரங்களையும் மனித குடியேற்றங்களை உள்ளடக்கிய, பாதுகாப்பாக, சீராக மற்றும் நிலையாக மாற்றுதலையும் ஊக்குவிக்கும்.