ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 02 அன்று உலக கணினி கல்வியறிவு தினமானது அனுசரிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் டிஜிட்டல் கல்வியறிவு, இயக்கம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலக கணினி கல்வியறிவு தினமானது இந்திய கணினிப்பொறி நிறுனமான என்ஐஐடி-ஆல் ஏற்படுத்தப்பட்டது. இத்தினமானது 2001 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் 20-வது ஆண்டு நிறைவின் நினைவாக ஏற்படுத்தப்பட்டது.