உலக கணினிக் கல்வி தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
கணினிகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பதற்கும் கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் இந்தத் தினம் அனுசரிக்கப் படுகின்றது.
உலக கணினிக் கல்வி தினமானது முதன்முதலில் 2001 ஆம் ஆண்டில் தேசியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் (National Institute of Information Technology - NIIT) அனுசரிக்கப் பட்டது.