இது அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
இது நமது கண்கள் மற்றும் பார்வையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்து உரைப்பது, பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் கண் மற்றும் பார்வை நலப் பராமரிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Children, love your eyes" என்பதாகும்.
கண் பார்வை இழப்பின் அனைத்து வகைகளிலும் அவை ஆரம்பத்திலேயே மிக நன்கு கண்டறியப் பட்டால், அவற்றில் 90% பாதிப்புகள் தவிர்க்கப்படக் கூடியது அல்லது சிகிச்சையளிக்கக் கூடியது ஆகும்.
உலகளவில், சுமார் 220 கோடி நபர்கள் கண் பார்வைக் குறைபாடுடையவர்கள் ஆவர்.
10 கோடி மக்கள் தவிர்க்கப் பட்டிருக்கக் கூடிய அல்லது இன்னும் கவனிக்கப்படாமல் உள்ள கண் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.