TNPSC Thervupettagam

உலக கண்விழி விறைப்பு நோய் வாரம் 2021

March 15 , 2021 1264 days 428 0
  • உலகளவில் பார்வையற்ற தன்மைக்கு இரண்டாவது முக்கியக் காரணமாகக் கண்விழி விறைப்பு நோய் (Glaucoma) உள்ளது.
  • உலக கண்விழி விறைப்பு நோய் வாரமானது உலக கண்விழி விறைப்பு நோய்க் கட்டமைப்பு மற்றும் உலக கண்விழி விறைப்பு நோய் நோயாளிகள் அமைப்பு ஆகியவற்றின் ஒரு கூட்டு முன்னெடுப்பாகும். 
  • இந்த வாரத்தின் முக்கிய நோக்கம் கண்விழி விறைப்பு நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிவதற்காக வேண்டி தொடர் கண் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அனைவரையும் வற்புறுத்துவதாகும்.
  • உலக கண்விழி விறைப்பு நோய் தினமானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 12 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • கண்விழி விறைப்பு நோய் என்பது மீளாத வகையிலான பார்வையற்றத் தன்மைக்குக் காரணமான நோய்களில் ஒன்றாகும்.
  • ஆனால் ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டால், குறைபாடானது குறைக்கப்பட்டு, பார்வையானது பாதுகாக்கப்படும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்