TNPSC Thervupettagam

உலக கதிரியக்கத் தினம் - நவம்பர் 08

November 13 , 2022 651 days 188 0
  • X-கதிர்கள் என்றும் அழைக்கப்படும் X-கதிர்வீச்சுக் கண்டுபிடிப்பினை அங்கீகரிக்கச் செய்வதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்பட்டது.
  • 1895 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் ஜெர்மன் அறிவியலாளர் வில்ஹெல்ம் கான்ராட் ராண்ட்ஜன் X-கதிர்களைக் கண்டுபிடித்தார்.
  • இந்த கண்டுபிடிப்பிற்காக, 1901 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
  • கதிரியக்கவியல் என்பது விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடலில் உள்ள நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க மருத்துவம் சார்ந்த வரைபடமிடல் நுட்பத்தினைப் பயன்படுத்தும் மருத்துவத் துறையாகும்.
  • முதலாவது உலக கதிரியக்கத் தினமானது, 2007 ஆம் ஆண்டில் கதிரியக்க வல்லுநர்கள் மற்றும் கதிரியக்கத் தொழில்நுட்ப வல்லுநர்களின் சர்வதேசச் சங்கத்தினால் அனுசரிக்கப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் "நோயாளிகளின் பாதுகாப்பில் முன்னணியில் இருக்கும் கதிரியக்க வல்லுநர்கள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்