TNPSC Thervupettagam

உலக கருத்தடை தினம் - செப்டம்பர் 26

September 29 , 2023 425 days 218 0
  • இத்தினமானது எண்ணற்ற கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பெண்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து தகவலறிந்த முடிவுகளை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான ஒரு வாய்ப்பாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் முதன்முதலில் 2007 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டின் கருதுரு "The Power of Options" என்பதாகும்.
  • கர்ப்பம் அடைவதைத் தடுப்பதற்காக கருத்தடை அல்லது பிறப்புக் கட்டுப்பாடு முறை பயன்படுத்தப்படுகிறது.
  • ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், T வடிவ தாமிரக் கம்பி பொருத்துதல் போன்ற கருப்பையக கருத்தடை சாதனங்கள் மற்றும் ஊசி மூலம் உட்செலுத்தக் கூடிய கருத்தடை மருந்துகள் ஆகியவை பிரபலமான கருத்தடை முறைகளில் சிலவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்