TNPSC Thervupettagam

உலக கல்லீரல் அழற்சி தினம் (WHD) – ஜூலை 28

July 29 , 2023 391 days 178 0
  • இந்த நோயின் தடுப்பு, பரிசோதனை மற்றும் சிகிச்சையை ஊக்குவிப்பதோடு, கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது, உலக கல்லீரல் அழற்சி நோய் கூட்டணியால் 2008 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • 1967 ஆம் ஆண்டு ஹெபடைடிஸ் பி வகை வைரஸைக் கண்டுபிடித்த டாக்டர் பாரூச் ப்ளம்பெர்க்கின் பிறந்தநாளை இந்த நாள் நினைவு கூருகிறது.
  • 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முதலாவது ஹெபடைடிஸ் பி தடுப்பு மருந்தினை உருவாக்கினார்.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் 1976 ஆம் ஆண்டில் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசினை டாக்டர் பாருச் ப்ளம்பெர்க் அவர்களுக்குப் பெற்று தந்தன.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஒரு உயிர், ஒரு கல்லீரல்” என்பது ஆகும்.
  • ஹெபடைடிஸ் என்பது கல்லீரலில் ஏற்படும் அழற்சி ஆகும்.
  • இது மது அருந்துதல் மற்றும் பல சுகாதார நிலைகளால் ஏற்படுகின்ற வைரஸ் தொற்று ஆகும்.
  • A, B, C, D மற்றும் E என 5 வகையான ஹெபடைடிஸ் பாதிப்பு வகைகள் உள்ளன.
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் சுமார் 354 மில்லியன் மக்கள் நாள்பட்ட ஹெபடைடிஸ் B மற்றும் C பாதிப்புடன் வாழ்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்