TNPSC Thervupettagam

உலக கல்லீரல் அழற்சி நோய் தினம் - ஜூலை 28

July 28 , 2024 119 days 103 0
  • ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி நோய்) பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காகவும், தடுப்பு, பரிசோதனை மற்றும் சிகிச்சையை நன்கு ஊக்குவிக்கச் செய்வதற்காகவும், நோயை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்தப் பொது சுகாதாரக் கொள்கைகளை பரிந்துரைப்பதற்காகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • ஹெபடைடிஸ் என்பது கல்லீரல் அழற்சி நோய் ஆகும் என்ற நிலையில் இது மிகப் பெரும்பாலும் வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது.
  • இது மது அருந்துதல், சில மருந்துகள் மற்றும் தன்னுடல் தாக்க நோய்கள் போன்ற பிற காரணிகளாலும் ஏற்படுகின்றது.
  • வைரஸ் தொற்றினால் ஏற்படும் ஹெபடைடிஸ் நோய்த் தொற்றின் முக்கிய வகைகள் ஹெபடைடிஸ் A, B, C, D மற்றும் E ஆகியவையாகும் என்ற நிலையில் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான பரிமாற்ற முறைகள் மற்றும் சாத்தியமான உடல் நலப் பாதிப்புகளை விளைவிக்கின்றன.
  • உலகளவில் 304 மில்லியன் மக்கள் ஹெபடைடிஸ் B அல்லது C வகை வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “It’s time for action” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்