TNPSC Thervupettagam

உலக கல்லீரல் அழற்சி நோய் தினம் - ஜூலை 28

July 28 , 2022 760 days 258 0
  • இந்தத் தினமானது வைரஸ் மூலம் பரவும் இந்த நோய் பற்றி மிகுந்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த வருடத்தின் இந்தத் தினத்தின் கருப்பொருள், "ஹெபடைடிஸ் சிகிச்சையை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருதல்" என்பதாகும்.
  • 1967 ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவர் பாரூச் சாமுவேல் ப்ளம்பெர்க் ஹெபடைடிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்தார்.
  • நோபல் பரிசு பெற்ற இந்த அறிவியலாளரைக் கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூலை 28 ஆம் தேதியானது உலக கல்லீரல் அழற்சி நோய் தினமாக தேர்வு செய்யப் பட்டது.
  • ஹெபடைடிஸ் வைரஸ் ஆனது, A, B, C, D மற்றும் E என்ற ஐந்து முதன்மைத் திரிபுகளைக் கொண்டுள்ளது.
  • உலக ஹெபடைடிஸ் கூட்டணியானது 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டு முதல் சமூகத்தினால் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டு, உலக கல்லீரல் அழற்சி நோய் தினம் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்