ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி உலக கல்லீரல் தினம் (World Liver Day) கொண்டாடப்படுகின்றது.
2018-ஆம் ஆண்டிற்கான உலக கல்லீரல் தினத்தின் கருத்துரு “கல்லீரல் நோய் கண்டறிதல், மற்றும் சிகிச்சையில் புதிய அலைகளை செலுத்துதல்” (Riding new waves in liver diagnosis and treatment).
உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation) ஆய்வின் படி, கல்லீரல் தொடர்புடைய நோய்களானது இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காரணமான 10-வது நோயாகும்.