TNPSC Thervupettagam

உலக கல்லீரல் தினம் – ஏப்ரல் 19

April 20 , 2023 588 days 198 0
  • கல்லீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவது மற்றும் ஆரோக்கியமான கல்லீரலை எவ்வாறு பேணுவது என்பது குறித்து மக்களுக்குக் கற்பிப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
  • உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, 1990 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில், புதிய கல்லீரல் புற்றுநோய்ப் பாதிப்புகளானது 100% அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில் கல்லீரல் சார்ந்த கோளாறுகள் என்பவை இறப்புக்கான பொதுவான காரணங்களில் 10வது இடத்தில் உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘விழிப்புணர்வுடன் இருத்தல், வழக்கமான கல்லீரல் பரிசோதனை மேற்கொள்தல், கொழுப்பு மிக்க கல்லீரல் நிலை யாரை வேண்டுமானாலும் பாதிக்கக் கூடியது’ என்பதாகும்.
  • கல்லீரல் நமது உடலின் இரண்டாவது மிக முக்கியமான உறுப்பாகும்.
  • இது வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்புச் சக்தி, கழிவகற்றம் மற்றும் உறிஞ்சப்பட்ட ஊட்டச் சத்துக்களின் சேமிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய ஐநூறுக்கும் மேற்பட்ட செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்