TNPSC Thervupettagam

உலக கழிப்பறை தினம் - நவம்பர் 19

November 22 , 2018 2137 days 547 0
  • சர்வதேச சுகாதார பிரச்சனைளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதற்காக அலுவல்பூர்வ ஐ.நா. சர்வதேச அனுசரிப்பு தினமான உலக கழிப்பறை தினம் நவம்பர் 19 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • 2001 ஆம் ஆண்டில் உலக கழிப்பறை அமைப்பால் உலக கழிப்பறை தினம் தொடங்கப்பட்டது.
  • 2013 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையானது உலக கழிப்பறை தினத்தை அலுவல்பூர்வ ஐ.நா. தினமாக அறிவித்தது.
  • ஐ.நா. - நீர் ஆணையமானது உலக கழிப்பறை தினத்தை அனுசரிக்கும் அதிகாரப்பூர்வ நிறுவனமாகும். இந்நிறுவனம் உலக கழிப்பறை தினத்திற்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பராமரிக்கிறது. மேலும் இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்திற்கான சிறப்புக் கருத்துருவைத் தேர்ந்தெடுக்கிறது.
  • 2018 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துருவானது “இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகள்” என்பதாகும்.
  • 2018 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான முழக்கமானது “இயற்கை அழைக்கும்போது, நமக்கு கழிப்பறை தேவைப்படுகிறது” என்பதாகும்.
  • 2016 ஆம் ஆண்டு முதல் ஒட்டுமொத்த வருடாந்திரக் கருத்துருவானது உலக கழிப்பறை தினம் மற்றும் உலக நீர் தினம் (மார்ச் 22) ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • ஐ.நா. நீடித்த வளர்ச்சி இலக்கு 6 ஆனது 2030 ஆம் ஆண்டில் சுகாதார மேலாண்மை மற்றும் நீர் தேவையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்