TNPSC Thervupettagam

உலக கழிவறை தினம் - நவம்பர் 19

November 24 , 2022 639 days 234 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘புலப்படாதவற்றினைப் புலப்படக் கூடியதாக மாற்றுதல்’ என்பதாகும்.
  • போதிய துப்புரவு பேணுதல் அமைப்புகள் இல்லாமலிருப்பது, மனிதக் கழிவுகளை ஆறுகள், ஏரிகள் மற்றும் மண்ணில் பரப்பி, நிலத்தடி நீர் ஆதாரங்களை எவ்வாறு மாசுபடுத்துகிறது என்பதை இத்தினம் ஆராய்கிறது.
  • நிலையான மேம்பாட்டு இலக்கு (SDG) 6.2: 2030 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் பாதுகாப்பான கழிவறைகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வது என்ற ஒரு வாக்குறுதியை உலக நாடுகள் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிங்கப்பூர் அரசானது இது தொடர்பான தீர்மானத்தை முன்வைத்ததையடுத்து, 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்த நாளை அறிவித்தது.
  • 193 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன் வைக்கப் பட்ட சிங்கப்பூரின் முதல் தீர்மானம் இதுவாகும்.
  • ஐக்கிய நாடுகள் - தண்ணீர் வள அமைப்பானது உலக கழிவறை தினத்தின் அதிகாரப் பூர்வ குழுத் தலைமை (அவைக் கூட்டுநர்) அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்