TNPSC Thervupettagam

உலக காச நோய் (TB) அறிக்கை 2020

October 22 , 2020 1495 days 702 0
  • சமீபத்தில் உலக சுகாதார நிறுவனமானது உலக காச நோய் அறிக்கை, 2020 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கை கோவிட் – 19 தொற்றானது உலகில் காச நோய் தொடர்பான இறப்புகளை 8 ஆண்டுகளுக்குப் பின்நோக்கி இழுத்துச் சென்று விடும் என்று கூறுகின்றது.
  • வேறு வார்த்தைகளில் கூறுவதனால், இது TB (Tuberculosis) இறப்புகளை 0.2 லிருந்து 0.4 மில்லியனாக அதிகரிக்கக் கூடும் என்று தெரிகின்றது.

சிறப்பம்சங்கள்

  • பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவை உலகில் 44% காச நோய் நிகழ்வுகளுக்குக் காரணமாக விளங்குகின்றன.
  • மருந்து எதிர்ப்பு கொண்ட காச நோயினை அதிகம் கொண்டுள்ள மூன்று நாடுகள் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியனவாகும்.
  • உலகில் மூன்றில் 2 பங்கு காச நோய் நிகழ்வுகளுக்குத் தாயகமாக இருக்கும் 8 நாடுகள் இந்தியா, இந்தோனேஷியா, சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், நைஜீரியா, வங்க தேசம் மற்றும் ரஷ்யா ஆகியனவாகும்.
  • 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக் கட்டத்தில், 9% TB நிகழ்வுகள் குறைந்துள்ளன மற்றும் 14% TB இறப்புகள் குறைந்துள்ளன.
  • இந்தியாவானது உலகில் அதிக TB நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.
  • மொத்த உலக TB நிகழ்வுகளில் 26% நிகழ்வுகள் இந்தியாவில் ஏற்படுகின்றன.
  • இந்தியாவானது 2020 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையில் TB நிகழ்வுகளை அறிவிக்கச் செய்வதில் 85% என்ற அளவிற்கு  ஒரு சரிவை ப் பதிவு செய்துள்ளது.
  • TB இறப்புகள் 2,00,000 மற்றும் 4,00,000 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட அளவில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்