காசநோயை ஒழிப்பதன் அவசியம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதியன்று உலக காசநோய் (TB) தினம் அனுசரிக்கப் படுகிறது.
1882 ஆம் ஆண்டு டாக்டர் ராபர்ட் கோச் காசநோயை உண்டாக்கும் பாக்டீரியாவைக் கண்டறிந்ததை இந்த நாள் குறிக்கிறது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Yes! We Can End TB: Commit, Invest, Deliver" என்பதாகும்.
2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் இலக்கு உலகின் மிகவும் இலட்சிய மிகு சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாகும்.
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் (NTEP) கீழ், இந்தியாவானது மிக மேம்பட்ட நோயறிதல்களுடன் அதன் காசநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளை நன்கு வலுப்படுத்தி உள்ளது.